• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரேமலதாவின் கேப்டன் ரத யாத்திரை குமரியில் நிறைவு..,

கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின், இன்றைய பொதுச் செயலாளர் பிரேமலதா. தேர்தல் பரப்புரை பயணமாக சென்னையில் தொடங்கிய உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் தேர் பயணம்.பெப்ரவரி 1_ம் நாள் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் தில் நிறைவடைந்தது.

தேர்பயண நிறைவு நிகழ்வில் பேசிய பிரேமலதா. ஆண்டகட்சிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் தேமுதிக ஒரு சிம்மசெப்பனமாக இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்து அமையும் ஆட்சியில் நம்முடைய பங்களிப்பு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.

கடலூரில் நாம் நடத்திய மக்கள் உரிமை மாநாடு மாபெரும் வெற்றிக்கு அங்கு திரண்ட
கேப்டனின் 10_வட்சம் தொண்டர்களே சாட்சி.தொண்டர்களின் உற்சாகமான ஆதரவு தான் அடிப்படை காரணம்.

2026 தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி என்பதை எதிர் வரும் 3_ம் தேதி சென்னை சென்றபின் தீர்மானிக்க உள்ளேன்.

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

குமரியில் கனிமங்களை எடுத்து செல்லும்
கனரக வாகனங்கள் கட்டுப்பாடற்ற நிலை. கனகராக வாகனங்களால் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்வில் பிரேமலாதாவிற்கு ஆள் உயர மாலை பூ கீரிடம் அணிவித்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.