*புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்ட புனித நீர் குறைத்தினை இரண்டு நாட்களாக யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடத்தினை தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி பின்னர் கோவில் கும்பத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவான் வானில் வட்டமிட பின்னர் சிவாச்சாரியார்கள் கும்பத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காளியம்மன் மற்றும் வள்ளி முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.