• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஏ.சித்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு கொடுமுடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலசம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

எரியோடு, வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் ஏற்பாடுகளை ஊர் கவுடர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.