• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா..,

ByKalamegam Viswanathan

Feb 9, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ்‌ ஆர் எம் எஸ் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி ஞாயிறு மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது திங்கள் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு கணபதி பூஜை உடன் தொடங்கிய இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து அருள்மிகு கற்பக விநாயகருக்கும் பாலசுப்ரமணிய சுவாமிக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால் தயிர் வெண்ணை நெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியப்பொடி இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.