
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு உடற்கல்வித்துறை சார்பில் பிட் மற்றும் பன் பீஸ்டா முகம் கடந்த 12ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

இந்த முகாமில் எட்டு வயது முதல் 18 வயது வரை பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவிழா நடைபெற்றது .இதில் கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் கலந்துகொண்டு பேசியது மாணவர்களின் விளையாட்டு திறனை அறியவும் வளர்ப்பதற்காகவும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது .இந்த கோடை விடுமுறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் எனக் கூறினார். தொடர்ந்து முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கல்லூரி செயலாளர் செல்வராஜன் வழங்கினார் .
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலமுருகன் கல்லூரி துணைத் தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக இளநிலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி தர்ஷினி வரவேற்று பேசினார். இளநிலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் சரோன் ரோஸ் நன்றி கூறினார்.
