• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம் பேசும் ஆடை துறந்த அமலாபால்

ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் எந்தவொரு புதியதமிழ் படத்திலும் நடிக்கவில்லை வாய்ப்புக்காக காத்திருந்த அமலாபாலை வெப் தொடர் தயாரிப்பாளர்கள் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக செயல்படும் அமலாபால் வாய்ப்பு தேடும் புதுமுக நடிகை போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அத்துடன் பயண வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவிலுக்கு சென்று வந்துள்ள அமலாபால் நெற்றி நிறைய குங்குமத்துடன் கழுத்தில் பெரிய மாலையுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி கூறியுள்ள அமலாபால், அசாமில் நீலாச்சல் மலையில் அமைந்துள்ள காமாக்கியா தேவியை தரிசித்தேன்… பெண்களின் சக்தியின் அம்சமாக இந்த கோவிலுக்குள் சென்றபோது அதன் சக்தியை என்னால் உணரமுடிந்தது.. நானாகவே எனக்குள் ஒரு தாய்மை உணர்வை கொடுத்துக்கொண்டு, அப்படியே எனக்குள் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வுடன் திரும்பி வந்தேன்என ஆன்மீகம் பேசியுள்ளார்.