தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் முக்கியமான ஆலயமாகவும் வாஸ்து ஆலயமாகவும் செவலூர் பூமிநாதர் ஆலயம் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் இன்று ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இன் நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது புதுமனை வீடு கட்ட சிறப்பு யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு செங்கல் கற்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

அப்போது கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.