• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Feb 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் காளியம்மன், துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல் விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் உள்ள கோட்டை காளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.