புரட்டாசி மாத நான்காம் வாரம் சனி கிழமையை (கடைசி வாரம்) முன்னிட்டு இன்று விருதுநகர் ராமர் கோவிலில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்,அலங்காரம் நடைபெற்றது.

விசேஷ திருநாளான இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்,மற்றொரு கோயிலான பஞ்சு பேட்டையில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தகோடிகள் அனைவருக்கும் துளசி தீர்த்தமும், சர்க்கரை பொங்கலும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
