



விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழிலில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் வண்ணம் வசந்த பஞ்சமி ஹோலி பண்டிகை என்று உஜ்ஜினியில் பிரசித்தி பெற்ற அக்னி தேவருக்கு அதிபதி.ஸ்ரீ மங்கல்நாத் சிவன் கோவிலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி சுற்றுவட்டார மக்கள், பட்டாசு தொழிலாளர்கள், நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி செவ்வாய் பகவான் மற்றும் நவ கிரகங்களுக்கு சிறப்பு அர்ச்சனை பூஜை செய்யப்பட்டது.

கோவில் பண்டிதர்கள் சொல்லும் பொழுது ராஜம்சம் பொருந்திய முன்னாள் அமைச்சரும் விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் செய்த பூஜையின் மூலம் நவகிரகங்கள் சாந்தி அடைந்து விருதுநகர் சிவகாசி பகுதி மக்கள் தீ விபத்துகள் ஏற்படாமல் தொழில் முன்னேற்றம் அடைந்து உலக அளவில் சிவகாசி பட்டாசு தொழில் மேம்படும் என்று தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் விவசாயம் பெருக வேண்டும் என்பதற்காக வசந்த பஞ்சமி நாளன்று மதியம் 11 மணியளவில் ஸ்ரீ மங்கல் நாத் சிவபெருமான் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர் திருகரங்களால் அன்னாபிஷேகம் செய்தார். பிறகுஉஜ்ஜயினி ஹர்ஷித் மாதா ஆலயத்தில் கருவறையில் சென்று தமிழ்நாட்டு மக்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும். இன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது .

