• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

ByT. Balasubramaniyam

Sep 27, 2025

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோயில் புரட்டாசி மாதத்தில் வரும் இரண்டாவது சனிகிழமையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் இத்திரு கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் இரண்டாவது சனிகிழமையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர். மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர்.

புரட்டாசி மாதம் 11ம் தேதி இரண்டாவது சனிகிழமையையொட்டி 19வது வார்டு சங்குபேட்டை ஆப்பூரான் கோயில் அன்னதான குழுவினர் சேர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.