தமிழக சட்டமன்ற தேர்தலில்.அ.தி.மு.க., உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும்
என்பது. உலகமகா கேள்விக் குறியாக இருக்கும் சூழலில்.

கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திட கேரள மாநிலம் ‘ஆலுவா’ திருவைராணிகுளம் பிரசித்தி பெற்ற சிவன் பார்வதி திருக்கோவிலில் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்சன் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார் அவர்கள் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்அக்ஷ்யா_கண்ணன் ஆகியோர் உடன் சென்றார்கள்.




