• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்ட காங்கிரஸ் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்..,

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி – ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.