• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குழந்தை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை..,

ByPuthar Pandian P

Mar 23, 2026

நிலக்கோட்டை அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவிராயபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தையை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றது

தவக்காலம் தொடங்கி ஆண்டுதோறும் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், மேல கோவில்பட்டி, மைக்கேல் பாளையம், உள்ளிட்ட வட்டார பங்கு ஆலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் பாதயாத்திரையாக கவிராயபுரம் வந்தடைந்தனர் பின்னர் அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் நடைபெற்ற திரு ஜெபமாலை, திருமறை ஆராதனை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆசி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று இயேசு கிறிஸ்து பாடுபட்ட நிகழ்வினை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் ஆலய பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில் உலக அமைதி வேண்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.