• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கேந்திரன் பேச்சு..,

BySeenu

Mar 23, 2026

அண்மையில் மாசாணி மற்றும் வெற்றி விநாயகர் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய வடம் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் மற்றும் இதே கூட்டணியில் உருவாக உள்ள ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது..

இதில் நடிகர்கள் இசையமைப்பாளர் இமான் ஒளிப்பதிவாளர் தீபக் மற்றும் நடிகர்கள் முனீஸ் காந்த்,பாலசரவணன்,துருவ் கார்த்திக் மற்றும் வடம் படத்தில் நடித்த நடிகைகள் என பலர் கலந்து கொண்டனர்..

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தொழில் நுட்ப வளர்ச்சியால் இசை துறையில் பெரிய மாற்றங்கள் வந்தாலும்,இசை உணர்வு உள்ளவர்களால் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய இயக்குனர் கேந்திரன்,சென்சார் போர்டுகள் சினிமா துறைக்கு அவசியமான ஒன்றுதான் என கூறிய அவர்,தாம் இது வரை இயக்கி உள்ள படங்களுக்கு சென்சார் போர்டுகளால் எந்த பிரச்னைகளும் வந்ததில்லை என கூறினார்..

பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் என்ற வேற்றுமையை தாம் பார்ப்பதில்லை என தெரிவித்த அவர்,நடிகர்களுக்காக படம் எடுத்தால் அதில் பெரிய வெற்றியை தர முடியாது என கூறினார்..

நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறிய அவர்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் கூட நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்..

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் விமல் நடிக்க உள்ள ரேஸ் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது..