
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில் மகா சனி பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு எதிரே உள்ள நந்தி பெருமானுக்கு திரவியங்கள், மஞ்சள் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும் உற்சவ பிரதோஷ மூரத்தி கோவில் உள்பிரகாத ஆலயத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு தீபாதாரணை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் பிரதோஷம் வழிபாடு நடைபெற்ற நேரத்தில் அதிசய நிகழ்வாக கோவில் கோபுர வாசலில் பசுமாடுகள் பிரதோஷ விழா நிறைவடையும் வரை கோவில் வளாகத்தில் சிவலிங்கத்தை வழிபடுவது போல கோவிலுக்குள்ளேயே நின்றதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். இவ்வாலயத்தில் பிரதோஷம் விழா நடைபெறும் நேரத்தில் பசுமாடுகள் வந்து வழிபடுவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
