• Mon. Apr 29th, 2024

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்..!

Byவிஷா

Sep 28, 2023

தமிழகத்தில் நவம்பர் 4,5,18,19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணி மேற்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மத்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். அதில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் தொடங்கும் நாளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்றும் அன்று வாக்காளர் பட்டியல் வரைவு பட்டியலாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 17ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கும் எனவும் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 4,5,18,19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *