• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாத சுவாமி அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகன் வள்ளி தெய்வானை பாலதண்டாயுதபாணிக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வள்ளி தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது.

இதில் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் விழா கமிட்டியினர் தென்கரை கிராமத்தினர் செய்திருந்தனர்.