• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமலைநாயக்கர் பிறந்தநாள்விழா..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்விழா வாடிப்பட்டி பகுயில் தாதம்பட்டி, போடிநாயக் கன்பட்டி இராமநாயக்கன்பட்டி, . பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

வாடிப்பட்டி பேரூராட்சி 1வது வார்டு சாணாம்பட்டியில் நடந்த விழாவிற் கு சங்க நிர்வாகி பொன்ராம் தலைமை தாங்கி திருமலை நாயக்கர் உருவபடத்திற்கு மலர்
தூவி மரியாதைசெய்து இனிப்பு வழங்கினார். போடிநாயக்கன்பட்டி யில் சங்க நிர்வாகி கலைச்செல்வ ன் தலைமையில் சங்கநிர்வாகிகள் மலர் தூவி இனிப்பு வழங்கினர். இராமநாயக்கன்பட்டியில் நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தாதம்பட்டியில் லாலா திரையரங்கில் நாயுடுசங்க அலுவலகத்திலிருந்து சிலம்ப மாணவர்கள்செல்வதேவ் அக்ஷய் குமார் தேவசேனகன் களின் சிலம்பாட்டம், மேளதாத்துடன் பட்டாசு வெடியுடன் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு தாதம்பட்டி நீரேத்தான் மந்தைதிடல் வழியாக பெருமாள்கோவில், வருவாய்ஆய்வாளர் அலுவலகம், புதூர்பிரிவு, பஸ்நிலையம், லாலாபஜார் வழியாக சந்தை
வாசலை அடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து திருமலை நாயக்கர் திரு உருவ படத்திற்கு சங்க தலைவர் பொன் கமலக்கண்ணன் தலைமையில் தி.மு.க பேரூர் செயலாளர் பால்பாண்டியன், அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் காளிதாஸ், தே.மு.தி.க மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பொன் யாழினி,பேரூர் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதில் குருவித் துறை வேணுகோபால் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் கஜேந்திரன், ஜெயராம், புருசோத்தமன், விஜயகுமார், ராதாகிருஷ்ணன், ராஜகோபால், முருகன், முத்துப் பாண்டி, கார்த்திக், குணா, நாகராஜ்,மெடிக்கல் வீரமணி, மனோஜ் குமார், விக்னேஷ்வரன், கரி பாண்டி, கோபி, இளங்கோவன், பாபு, ராஜா, சுந்தர், சுதாகர், கிருஷ்ணன், செந்தில், சரவண பாண்டி, ரங்கசாமி, புல்லட் சீனி, வாசுதேவன், ஸ்ரீ ஹரி,ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன் ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.