• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

ByR. Vijay

Mar 23, 2025

திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள‌ பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாக மற்றும் அஷ்டபைரவர் சன்னதியாக விளங்கும் ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் உள்ளிட்ட 8 பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடு பின்னர் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர், மயிலாடுதுறை ,காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.