• Fri. Apr 18th, 2025

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கை..

ByS.Ganeshbabu

Mar 22, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கீழ்வேளூர் கடைத்தெருவில் ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கினையும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கையை கழக அமைப்புச் செயலாளர், நாகை மாவட்டக்கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் MLA அவர்கள் தலைமையில் இன்று கீழ்வேளூர் கடைத்தெருவில் வழங்கினார்கள்.

இவர்களுடன் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். சிவா மற்றும் ஊராட்சி கழக செயலாளர் கிளை கழக செயலாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.