• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு சொர்ண வராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்..,

ByKalamegam Viswanathan

Mar 6, 2026

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சொர்ணவராகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு பால் தயிர் பன்னீர் சந்தனம் பஞ்சகாவியம் இளநீர் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக வராகி அம்மன் கோவிலில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. விழா நிறைவில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. சொர்ணவராகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பஞ்சமி பூஜையில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் .