தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு சண்முகநாதர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சண்முக நாதர் சன்னதி இங்கு வள்ளி தேவசேனா சமேதமாக உள்ள சண்முகநாதருக்கு விசேஷ நாட்கள் முழுவதிலும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சண்முகநாதர் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அரிசி மாவு, பால், தயிர், மஞ்சள் திருமஞ்சன பொடி, கரும்புச்சாறு, இளநீர், பன்னீர், திருநீர், பஞ்சாமிர்தம், தேன்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்கள் கொண்டு சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சண்முகநாதர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த அபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை மனம் உருகி தரிசித்துச் சென்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.