• Sat. Apr 26th, 2025

ஸ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண வைபவம்..,

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ராமர் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ராமர் கோவிலில் சீதாராம திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ விஸ்வகர்மா ராமர் குல ஆவுடையவாளு தரப்பினர் சார்பாக ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து கம்பம் நகரை ஊர்வலமாக சுற்றி கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருமண சீர்வரிசைகளும் கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமர், லட்சுமணன், சீதாதேவி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு அரிசி மாவு, திருமஞ்சன பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண மலர்கள், துளசி உள்ளிட்டவைகள் கொண்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் யாக குண்டம் வளர்க்கப்பட்டு திருமாங்கல்ய பூஜைகளும் தொடர்ந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் ஜானகி என்ற சீதாதேவிக்கும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தீபங்கள் கொண்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ராமநவமியை முன்னிட்டு பக்தர்களுக்கு ஸ்ரீ ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்து சென்றனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.