கொரோனா தொற்றால் உயிர் இழந்த செய்தியாளர்
எம்.செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கோரிக்கை.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களாக சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் உயிர் இழந்த தமிழன் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் எம்.செந்தில்குமார் குடும்பத்திற்கு அரசு அறிவித்த அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டக் கூட்டம் :
தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியனில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் வியாழக்கிழமையன்று மாநிலத் துணைத்தலைவர் கே.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.ஆனந்தன் அனைவரையும் வரவேற்றனர். மூத்த பத்திரிகையாளர் எஸ்.நவமணி சகோதர சங்க நிர்வாகிகள் டி.தாமைரைச்செல்வன் டி.எம்.சசிகுமார், எம்.கருணாநிதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்த தமிழன் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் எம்.செந்தில்குமார், வின் டிவி செய்தியாளர் கே.நாகராஜனின் மனைவி என்.நளினா மற்றும் காவல்
துறையினர் மருத்துவர்கள் செவிலியர்கள் பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் :
9 பேர் கொண்ட மாவட்ட நிர்வாக குழுவில் மாவட்ட தலைவராக கே.வி.கண்ணன் மாவட்ட செயலாளராக ஆர்.ஆனந்தன் மாவட்ட பொருளாளராக எஸ்.ஐயப்பன் மாவட்ட துணை தலைவர்களாக வழக்கறிஞர் பா.அன்பரசன் என்.மகாலிங்கம் மாவட்ட துணை செயலாளர்களாக எஸ்.ராஜுவ்காந்தி கே.சூர்யாமோகன் செயற்குழு உறுப்பினர்களாக வி.பாலமுருகன் டி.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் செய்தியாளர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய செய்தியாளர் அறை ஒதுக்கி தர வேண்டும். போலி நிருபர்களை இனம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினருக்க வழங்குவதை போல முன்கள பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கும் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.