• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்திய போர் விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்ப கருவி!…

By

Aug 19, 2021

விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த சாதனத்தில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியன் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். தீப்பிழம்புடன் இது போர் விமானங்களில் இருந்து வெளியேறி காற்றில் பறக்கும்போது, லேசர் மூலம் செயல்படும் எதிரிநாட்டு ஏவுகணைகளை திசை திருப்பும். இதன் மூலம் தாக்குதலில் இருந்து போர் விமானங்கள் தப்பிக்க முடியும்.

ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகம், புனேவில் உள்ள டிஆர்டிஓ-வின் ‘ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆய்வகத்துடன், இணைந்து இந்த ‘சாஃப்’ கேட்ரிட்ஜ் – 118/I’ சாதனத்தை உருவாக்கியுள்ளது. வெற்றிகரமான பரிசோதனைகளுக்குப்பின், இந்த ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை, விமானப்படையில் சேர்க்கும் நடவடிக்கையை இந்திய விமானப்படை தொடங்கியுள்ளது.