• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்

ByA.Tamilselvan

Jul 19, 2022

இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

சூரியனுக்குமேலே தெரிவதுதான் சூரிய புயலின்தோற்றம்


சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார். சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் ரேடியோ அலைகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் ஜிபிஎஸ் சேவை பாதிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூரியபுயல் எப்படியிருக்கும் வீடியோ…


இந்த சூரிய புயல் இன்று காலையிலேயே பூமியை தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரிய புயலை ஜி என்ற எழுத்தால் அளவிடப்படுகிறது. இதில் ஜி1 என்பது மிதமான புயல் என்பதும் ஜி5 மிகவும் ஆபத்தான சூரிய புயலாகவும் அளவிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கனடாவை சூரிய புயல் தாக்கிய நிலையில், இன்று நேரடியாக மிகப்பெரிய சூரிய புயல் தாக்கப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.