பெண் கல்வி முக்கியம் எங்கள் காலத்தில் பெண்களைப் படிக்க பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் இன்று பெண் கல்விக்கு முக்கியத்துவத்தை குடும்பமும், அரசும் வழங்குகிறது. ஆகையால் அவற்றை பயன்படுத்தி மேன்மை அடையுங்கள்.
எனது கிராமம், எனது ஊர் என்று பெயர் சொல்லும் அளவுக்கு மாணவ, மாணவிகள் கல்வியால் சாதனை படையுங்கள். மரக்கன்றுகள் மட்டுமல்ல உங்கள் மைண்டையும் வளர்த்து நமது கிராமத்தை மேம்படுத்துங்கள் என சென்ற வருடம் மரக்கன்றுகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சேவகி லூர்து மேரி அரசு பள்ளி ஆண்டு விழாவில் பேசி உள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் ஊராட்சி, தந்தை பெரியார் நகரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வருடத்திற்கான பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் மாதவி தலைமையில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவ, மாணவிகளின் நடன போட்டி, வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். தந்தை பெரியார் நகரில் வசித்து வரும் சமூக சேவகி லூர்து மேரி சென்ற ஆண்டு விழாவின் போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 750 மரக்கன்றுகள் கொடுத்து அவர்களை பள்ளி சுற்று வட்டார வளாகத்தில் மரக்கன்றுகளை நடும்படி செய்தார்.

மரங்களை நட்டபள்ளி மாணவ, மாணவிகள் அதை தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்த நிலையில் அவர்களை பாராட்டும் விதமாக இந்த வருடமும் சமூக சேவகி லூர்து மேரி அவர்களை பாராட்டி அவர்களுக்கான நினைவு பரிசு மற்றும் வீட்டில் மரம் நடும்படி மரக்கன்றுகளை பரிசளித்தார் .
மேலும் பெண் குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து, நமது கிராமத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். படிப்பை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நமது நாடும் நாமும் நன்றாக இருப்போம் .

கோடி செல்வம் இருந்தாலும் கல்வி செல்வம் போல் பயன் இருக்காது இன்று படித்த பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிகிறார்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலமாகவும் வேலை செய்கிறார்கள்.
எங்கள் காலத்தில் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை ஆனால் இன்று பெண் கல்விக்கு வீட்டில் உள்ள குடும்பத்தாரும் தமிழக அரசும் பல்வேறு உதவிகள் செய்கிறது ஆகையால் கல்வி கற்று மேன்மை அடையுங்கள் உங்கள் மனதையும் மரங்களைப் போல் சுதந்திரமாக வைத்து வாழ்க்கையில் சாதனை புரியுங்கள் என சமுக சேவகி லூர்து மேரி கூறினார்.

அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் நமது நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற முடியும் படிப்பு தான் முக்கியம் சென்ற வருடம் 750 மரக்கன்றுகள் வாங்கி கொடுத்தேன். அதை அத்தனை மாணவர்களும் மரங்களை வளர்த்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும் போது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

மரக்கன்று மட்டுமல்ல உங்கள் மைண்டையும் வளர்த்து நமது கிராமத்தை மேம்படுத்துங்கள் என பெண் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டார். சாமநத்தம் ஊராட்சி தந்தை பெரியார் நகரை சேர்ந்த சமூக சேவகி லூர்து மேரி கல்வி வளர்ச்சிக்காகவும் , பெண் கல்விக்காகவும் தன்னால் இயன்ற உதவிகள் செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கமும் அளிப்பது பெரும் பாராட்டுக்குரியது.







