

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் கள்ளழகர் போல் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்றிலிருந்து பங்குனி திருவிழா 15 நாளைக்கு தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சன்னதி தெரு, பெரிய ரதவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் தினந்தோறும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாகனம், சேஷ வாகனம், அன்னமயில் வாகனம், பூத வாகனம், பச்சை குதிரை வாகனம், யானை வாகனம், சர்ப்ப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருவது வழக்கம்.

இன்று முதல் என்பதால் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் நான்கு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு கள்ளழகர் தங்க குதிரையில் வருவது போல் காட்சியளித்தது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18- ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும் 19-ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


