• Thu. Apr 25th, 2024

இந்திய பிரதமரை பெருமைப்படுத்தி பேசிய சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி…

Byதரணி

Jul 30, 2022

தேவேந்திர குல வேளாளர், இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவர், சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி இந்திய பிரதமரின் வருகை குறித்தும் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகளை நினைவு கூறுகிறார். மற்றும் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

தமிழகத்திற்கு குறுகிய காலங்களில் இரண்டு முறை பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். ஒரு முறை தமிழக வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் .நேற்றைய முன் தினம் நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிபியாட் போட்டியை துவக்கி வைத்தார் . நேற்றைய தினம் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்திய பிரதமரின் தொடர் வருகை என்பது தமிழக செயல்பாட்டில் பிரதமரின் வருகை அக்கறையை காண்பிக்கிறது . இதனை தமிழக மக்கள் வரவேற்கின்றனர் இன்னும் தமிழகத்துக்கு தேவையான அதிகப்படியான திட்டங்களை கொண்டு வரவேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையே விரைவில் கட்டிமுடித்து மக்களின் நடைமுறைக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதால் தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது மத்திய அரசில் உள்ள பல திட்டங்கள் இன்னும் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மக்கள் முன்வைக்கின்றனர் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து செல்வது தமிழக மக்களின் உற்சாகத்தையும் தமிழக மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை தமிழக மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பிரதமர் பேசிய ஒரு சில வார்த்தைகளை நினைவு கூறுகிறேன்….

பிரதமர் எந்தசீட்டும் இல்லாமல் extempore ஆகப்பேசினார். தமிழ் அவரது தாய்மொழியில்லை. இருந்தும் எந்த தடங்கலும் இல்லாமல் திருக்குறள் சொன்னார். பூவனூர் கோயில் சதுரங்க வல்லபேஸ்வரர் என்று பேசி அசத்தினார். விளையாட்டில் தோல்வியாளர் என்பது இல்லை..வெற்றி பெற்றவர்..எதிர்காலத்தில் வெல்லப்போகிறவர் என்ற அருமையான கருத்தைச் சொன்னார். (“There are no losers in sports, there are winners & there are future winners”.)

அவர் பேசும்போது சரளமாகவும் ஒரு சிங்கம் கர்ஜிப்பது போன்றும் முழங்கினார். வரும் பொது தேர்தலின் போது அவர் தமிழில் பேசி தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *