ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தடுப்பது சிக்கலானது. எனினும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 2,100 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் நாடு முழுவதும் தலைவர்கள் சிலை துணியை வைத்து மூடப்பட்டுள்ளது. தேவையற்ற போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் சிலை மூடப்படாமல் உள்ளது. அதே போல் சர்ச்சைகள் ஏற்படுத்தும் போஸ்டர்கள் கிழிக்கப்படமால் உள்ளது. இப்படி பல்வேறு தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது விரைந்து தேர்தல் விதிமுறைகளை சிவகங்கை மாவட்ட தேர்தல் அதிகாரி அமல்படுத்த வேண்டும் என சிவகங்கை நகர் பகுதியில் சமூக ஆர்வலர்இன்று காலை சுமார் 10 மணியளவில் கோரிக்கை விடுத்துள்ளார்.