• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகை குஷ்பு பற்றி அவதூறு பேச்சு.., தி.மு.க பேச்சாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!

Byவிஷா

Jun 19, 2023

நடிகை குஷ்பு பற்றிய அவதூறு பேச்சால், தி.மு.க நிர்வாகி சிவாஜிகிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இதற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.