• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிம்புவுடன் ஜோடி சேர்ந்த சிவாங்கி!..

Byமதி

Oct 11, 2021

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி 2. போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானார் சிவாங்கி. இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.

அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி.வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ள இந்த படத்தில் ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது