நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வெளியான படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.