• Thu. Feb 13th, 2025

சிவகங்கை சுத்திகரிப்பு நிலைய பாதாள சாக்கடை கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் கிராம மக்கள் முற்றுகை…

ByG.Suresh

Nov 23, 2023

சிவகங்கை பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் 25 கால்நடைகள் உயிரிழப்பு. விவசாய நிலங்கள் பாதிப்பு. விவசாயிகள் வேதனை.

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 50,000 பேருக்குமேல் வசித்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர் முத்துப்பட்டி அருகே சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு கட்டணமாக சுமார் ஒரு கோடி ரூபாயினை நகராட்சி நிர்வாகம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதாள சக்கரை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள கண்மாயில் கலப்பதால் அதனை அருந்திய 25க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு சென்றனர். மேலும் கழிவு நீரில் மிதக்கும் மனித மல கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இன்று சுத்திகரிப்பு நிலையத்தை முன் முற்றுகையிட்டு தண்ணீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விட்டன இருப்பினும் அங்கு உயர் அதிகாரிகள் இல்லாததால் ஊழியர்களிடம் தெரிவித்தனர் இனியும் தொடர்ந்தார் அனைத்து கிராமங்களும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர் எனவே நகராட்சி நிர்வாகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்தவும், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.