பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த படுகொலைக்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ச பேசுகையில், இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கும், இலங்கையின் பிற தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியான நடவடிக்கை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த படுகொலை தொடர்பாக 100 பேரை போலீசார் கைது செய்துள்ள, பாகிஸ்தான் காவல்துறை மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.