• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடை கூடினார் சிம்பு…

Byகாயத்ரி

Jul 20, 2022

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது மாநாடு.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்தாக மஹா எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன்பின், வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல் இப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.இப்படம், கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த சிம்பு, தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார். அவருடைய சமீபத்திய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.