• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

ஆட்டோ டிரைவராக சிம்பு! – வைரல் வீடியோ!

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சிம்பு மீண்டும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கௌதம் கார்த்திக்குடன் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு ஆட்டோ டிரைவராக இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. சிம்பு ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் இருப்பது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினரோ இது திரைப்படத்திற்கானது என கூறுகின்றனர்.