• Thu. Jun 8th, 2023

ஏஆர்.ரஹ்மானை வம்புக்கு இழுக்கும் காயத்ரி!

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும் என்றார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ரஹ்மானை கௌரவித்தார். இந்நிகழ்ச்சி முடிந்து பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காய்தரி ரகுராம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஏஆர்.ரஹ்மான் கூறுவதை முழுக்க நான் ஆதரிக்கிறேன். அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெருமையாக எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார். ஜெய் ஹோ என்ற இந்தி பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை வென்றார். அப்போது நான் இந்தப் பாடலை தமிழில் செய்யவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்று கூறினாரா? எதையும் வெறுமென சொல்வதுடன் நிறுத்திவிடக்கூடாது. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக்கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *