• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிம்பு பர்த்டே ஸ்பெஷல்!

நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் கூட்டம் மாநாடு படத்திற்கு பிறகு பலமடங்கு அதிகரித்து விட்டது. அவரது அடுத்த படம் எப்படி இருக்கும், என்ன ரோல், எப்படி நடித்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்பு தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் தனது தந்தை டி.ராஜேந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மாநாடு தந்த வெற்றி
மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் சிம்புவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தன. அதற்கு பிறகு பல பிரச்சனைகளில் சிக்கிய சிம்புவிற்கு, நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரம்மாண்ட வெற்றியை மாநாடு படம் கொடுத்துள்ளது. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது! இதனால் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

பிறந்தநாள் ட்ரீட்
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட்களை கொடுக்க, சிம்பு நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ட்ரீட்டாக சிம்புவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். அதோடு மூன்றாவது ட்ரீட்டாக சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் மாஸ் லுக்கில் தோன்றும் சிம்புவின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்புவிற்கு பிடித்த விஷயங்கள்
சிம்புவிற்கு என்ன என்ன பிடிக்கும்! தகவல்களின் தொகுப்பு!

சிம்புவிற்கு பிடித்த நடிகர் – ரஜினி, அஜித்
பிடித்த உணவு – சிக்கன் பிரியாணி
பிடித்த விளையாட்டு – கிரிக்கெட், ஃபுட்பால்
பிடித்த இடம் – Bessy
அதிக நேரம் செலவிடுவது – தன்னுடைய மியூசிக் ஸ்டூடியோ
சிம்புவின் ஆசை – அண்ணாமலை ரீமேக்கில் நடிப்பது
பிடித்த இளம் இசையமைப்பாளர் – அனிருத்
பொழுதுபோக்கு – பாடுவது, எழுதுவது

சிம்பு தற்போது ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சிம்புவிற்கு பிஎம்டபிள்யூ கார், பைக் என்றால் மிகவும் நடிக்குமாம். இதனால் 2020 ம் ஆண்டு சிம்புவின் பிறந்தநாளுக்கு அவரது அம்மா உஷா ராஜேந்தர், Mini Cooper காரை பரிசாக வழங்கினார்.