தமிழகத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது கன்னியாகுமரி கடலின் நடுவே கடந்த 2000 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

அப்போது கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவாக கன்னியாகுமரியில் ரூ.1.45 கோடி செலவில் வெள்ளி விழா நினைவு தோரண வாயில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் அதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

நுழைவு வாயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வரும் 24,25 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 ஆம் தேதி நுழைவு வாயிலை திறந்து வைக்க உள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நகராட்சி மண்டல பொறியாளர் சனல்குமார், பொதுப்பணிதுறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர் ஜோசப்ரன்ஸ், ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,நகராட்சி ஆணையர் கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.






