

மதுரை மண்டேலா நகர் பகுதியில் இளம்பெண்ணிடம் வெள்ளி செயினை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் கடந்த 4ஆம் தேதியன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் திடீரென வந்த நபர் ஒருவர் பெண் அணிந்திருந்த செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.



முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அணிந்திருந்தது வெள்ளி செயின் என தெரிய வந்துள்ளதால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்காத நிலையில், தற்போது சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பான சூழலில் அவனியாபுரம் காவல் துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

