கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரம் மௌன குருசாமி பீடம் சன்னிதான உண்டியலை லாவகமாக தூக்கி சென்ற கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து குளச்சல் போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே அமைந்துள்ளது மௌன குருசாமி பீடம். இந்த சன்னிதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இங்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைக்காக சன்னிதான முன் பக்கம் பெரிய உண்டியல் ஒன்றும், பக்கவாட்டில் சிறிய உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த சன்னிதானத்தை வழக்கம் போல் நிர்வாகிகள் திறக்க வந்த நிலையில் கோயில் பக்கவாட்டில் இருந்த சிறிய உண்டியல் மற்றும் இன்வர்டர்கள் காணமல் போனதை கண்டு அதிர்ந்தனர்.
நிர்வாகிகள் சன்னிதானத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அங்கு லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் பெரிய உண்டியலை உடைக்க முற்பட்டு முடியாத நிலையில் சிறிய உண்டியல் மற்றும் இன்வர்டரை லாபகமாக கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளுடன் கொள்ளை சம்பவம் குறித்து நிர்வாகிகள் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் கொள்ளையனை தேடி வரும் நிலையில் தற்போது கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.