மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கவணம்பட்டி 24 வது வார்டு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
இதில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்திற்கு மாற்றுப் பாதை இல்லாமல் இருப்பதாகவும், குடிநீர், மின்மோட்டார், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,
இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த நகராட்சி பொறியாளர் சசிக்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



