தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பே பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் திருப்பி துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தப்பி சென்ற தீவிரவாதிகளை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு படையினர் கோபால்போரா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.