• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..

Byp Kumar

Aug 13, 2022

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் என திண்டுக்கலில் நடைபெற்ற சிவசேனா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று( அகஸ்ட் 13 )நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் சிவசேனா சார்பில் 5001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி கூறுகையில், தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், விநாயகர் சதுர்த்திக்கு ரேசன் கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், விநாயகர் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.