• Sat. Jul 13th, 2024

போலீஸ் தேடி போனதுக்குலாம் கால ஒடச்சிக்கிட்டேங்களே… சிரிக்கும் திமுக…கொதிக்கும் அதிமுக

Byகாயத்ரி

Feb 5, 2022

உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டு ஜெயிக்க பாருங்க… ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது சண்முகக்கனி … நீங்க பேசுன பேச்சுக்கு எங்க போலிஸ் தேடி போன உடனே எஸ்கேப் ஆகுறது எப்படின்னு நெனச்சி கால ஒடச்சிக்கிட்டது உங்களுக்கே நல்லாருக்கா என்று விருதுநகர் மாவட்டத்தில் மூத்த உடன் பிறப்புகள் பேசி வருவது தான் ஹைலைட் ஆன விஷயம்.

சண்முகக்கனி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு தொண்டர்கள் படை சூழ நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை பார்த்த உடன் மைக்கை பிடித்ததுமே  கெத்தான பேச்சை  பேச தொடங்கினார்சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலர் சண்முகக்கனி. உங்களுக்குலாம் ஒன்னு சொல்ல விரும்புறேன் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்துவிட்டு எந்தக் கவுன்சிலராவது கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து வெட்டுவேன். மாவட்டச் செயலரிடம் சொல்லிவிட்டும் வெட்டுவேன். இதோடு நிறுத்திவிடாமல், அப்படி வெட்டும்போது, என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும். கட்சியில் ஜெயித்துவிட்டு எவனாவது கட்சிமாறிப் போனால் உங்க போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்-ல்தாண்டா, எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விட படைசூழ இருந்த அதிமுக தொண்டர்களும், வேட்பாளர்களும் என்ன சண்முகக்கனி இப்படியெல்லாம் பேசுறாரு என்று முனுமுனுத்துக்கொண்டனர். இதை கேட்டா போலிஸ் சும்மா இருக்குமா…போடுங்கப்பா மூன்று வழக்க. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மீடியாக்கள் இதை ரிபீட் மோடில் காண்பித்து வந்தனர். அந்த அளவுக்கு வைரலோ வைரல் ஆனார் சண்முகக்கனி. பட்டி தொட்டி எங்கும் இந்த கூட்டத்தை பற்றிய பேச்சு தீயாய் பரவிய நிலையில் சாத்தூர் காவல்நிலைய போலீசார் அவரை தேடி வந்தனர். எப்பா சண்முகக்கனியை எங்கையாவது பார்த்தீங்களாபா என்று போலிஸார் கடைவீதிகளிலும், தெருக்களிலும் தேடி வந்தனர். இதில் அதிமுகவினர் பலர் ஏன் சண்முக்கனி அண்ணண தேடுறீங்க என்று போலிஸாரிடம் கேள்வி எழுப்ப, அதெல்லாம் மேலெடத்து விவகாரம் என்று போலீஸார் பாணியில் கூறியுள்ளனர். பின்பு வீட்டிக்குள் பயந்து ,ஒலிந்து, பதுங்கி இருப்பதை அறிந்து தேடி சென்ற போலீசாரை கண்ட சண்முகக்கனி வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்ட அதிமுக வட்டத்தில், ஏன் பயந்து ஓடனும் ஏன் கால ஒடச்சிக்கனும் என்று முனைப்போடு பேசி வருகின்றனர்.

இது பற்றி விருதுநகர் மாவட்ட மூத்த ரரக்களிடம் பேசினோம் :

திமுகவுல பலர் இதை சாக்கா வச்சி அதிமுகவை ஏளனமாக பேசியும் பார்த்தும் வருகின்றனர். அது எங்களுக்கு சங்கடமா தான் இருக்கு..இது போல சம்பவங்கள், மேடை பேச்சுக்கள-லாம் திமுக கட்சிக்குள்ள நடக்கலையா ..! எதையும் விட்டுவிட கூடிய சாமானியமான ஆளா திமுக-காறங்க: திமுகவை குறை கூற பல தவறுகள் செய்துள்ளார்கள். அதை பட்டியிலிட்டால் தமிழ்நாடு தாங்காது. அதேபோல் ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது சண்முக்கனி என்று ஏளனமாக பேசி வருவது கண்டிகத்தக்கது. இது நல்லதுக்கு இல்லை என்கிறார்கள் மூத்த ரரக்கள்.

பப்ளிக்கல இப்படி எல்லாம் பேசலாமாப்பா சண்முகக்கனி.. இந்த எங்க ஆட்சி..அதுவும் விடியல் ஆட்சி .. அதிமுக காரங்க எந்த தப்பு பண்ணாலும்  எங்க போலிஸ் துறை மந்திரி எங்க அண்ணன் ஸ்டாலின் தான்…உடனே தட்டி கேட்டுவிடுவோம் என்று விருதுநகர் மாவட்ட திமுக உடன்பிபறப்புகள் பேசி வருகின்றனர். எங்களோட போட்டி போட்டு உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து பாருங்க என்று சவாலும் விடுகின்றனர்.இந்த பேச்சுகளால் தான் சாத்தூர் ஒன்றிய செயலாளரின் வைரலுக்கு காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *