• Thu. Apr 18th, 2024

படப்பிடிப்புக்கு உடலை தயார் செய்யும் ஷாருக்கான்

மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அப்போது வெளிநாட்டில் பதான் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மகனை ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியில்
கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதையடுத்து ஆரியன்கான் சிறையில் இருந்து வெளியே வந்த போதும் உடனடியாக பதான் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை ஷாருக்கான். காரணம் சண்டைக் காட்சிக்காக வெயிட் குறைந்திருத்த ஷாருக்கான் மீண்டும் வெயிட் போட்டு விட்டாராம். அதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தவர் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், பதான் படத்தில் நடித்துக்கொண்டே அட்லீ இயக்கும் லயன் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *