• Wed. Apr 24th, 2024

நிழலை இன்னைக்கு பார்க்க முடியாது – காரணம் தெரியுமா?…

By

Aug 18, 2021

இந்த ஆண்டில் 2வது முறையாக தமிழகத்தில் இன்று ‘நிழலில்லா நாள்’ நிகழ உள்ளது.
ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் அன்று ‘நிழலில்லா நாள்’ என்று அழைக்கப்படுகிறது. இன்று இரண்டாவது முறையாக நிழலில்லா நாள் நிகழ இருக்கிறது.


வருடந்தோறும் 2 நாட்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலை பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுதான் ‘நிழலில்லா நாள்’ என அழைக்கப்படுகிறது. இந்த நிழலில்லா நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.
அந்த வகையில் ‘நிழலில்லா நாள்’ இந்தாண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களில் நிழலில்லா நாளைக் காணலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளைக் காட்சிப்படுத்தவும்

பொதுமக்களுக்கு அதுகுறித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிழலில்லா நாள் வந்தது. ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில் இன்று மதியம் இந்த நிழலில்லா நாளை காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *