தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாலும் நேற்று அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக இருவழிப்பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்த போதிலும் திடீரென தண்ணீர் கன் ஏற்றி வந்த வாகனம் ஜிஎஸ்டி சாலையில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.

பல்லாவரத்தில் இருந்து குரோம்பேட்டை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் தண்ணீர் கேன் வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பழுதான வாகனத்தை ஜிஎஸ்டி சாலையில் இருந்து அகற்றிவிட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருந்து நிதானமாக பயணித்து வருகின்றன.













; ?>)
; ?>)
; ?>)